ஆண்டவர் அழைக்கிறார்
கண்டில்லையோ? கவையில்லையோ?
ஆண்டவர் அழைக்கிறார் கேட்கலையோ?
வையகமனைத்தும் அவர் சப்தம் பேச
உன்னையும் விரும்புகிறார்
1. பிள்ளைகள் அப்பம் கேட்டு நின்றார்
வாலிபர் தெருவில் மூர்ச்சையானார்
வயோதிகர் வகை தெரியாது போனார் - இன்று
வழிகாட்டி கிறிஸ்தவரே
2. அடியவர் தியாகத்தை அணிந்துவிட்டால்
கொடியவர் தானாய்த் திருந்திடுவார்
அறியாமை உலகை மூடுவதேன் - என்
பொறுப்பை நான் மதியாததே
3. உலகத்தில் வெளிச்சம் வீசவேண்டி
பரலோகத் தந்தை ஆணையிட்டார்
நினைப்பவர் யாரோ உழைப்பவர் யாரோ
உதவுவார் யார் யாரோ?