கிறிஸ்தவ பாடல்

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

Karththar Iyaesuvil Vaeruunruvoem

வேரூன்றவும் கட்டப்படவும்

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

கன்மலை மீதே கட்டப்படுவோம்

விசுவாசத்தில் உறுதி கொள்வோம்

நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் - கர்த்தர்

1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்

மாயம் இல்லா மனத்தாழ்மையும் - 2

சாந்தம் நீடிய பொறுமையும் - 2

இரக்கம் தயவை தரித்திட - கர்த்தர்

2. வேத வசனத்தால் நிறையவும்

தேவ சமாதானம் ஆளவும்

பேதங்கள் இன்றி வாழவும்

பேரன்பில் வளர்ந்து பெருகிட - கர்த்தர்

3. திருவசனம் எங்கும் கூறவும்

திறப்பின் வாசலில் நிற்கவும்

இயேசுவின் நுகத்தை ஏற்கவும்

வருகையில் மகிமை அடைந்திட - கர்த்தர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு