கிறிஸ்தவ பாடல்

ஒளிதீபம் இளம் நெஞ்சில்

Olitheepam Ilam Negnsil

இளம் நெஞ்சில் ஒளிதீபம் ஏற்றுங்கள்

1. ஒளிதீபம் இளம் நெஞ்சில் குடியேற்றுங்கள் - அதின்

ஒளிவெள்ளம் உலகெங்கும் இருள் போக்கவே

திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே - 2

திரு ஜனமாக இனி மாந்தர் உறவாடவே

ஒன்றை வாஞ்சிப்போம்!

இணைந்து வாழுவோம்!

உலகை வெல்லுவோம்!

2. கொடிதான காலங்கள் தெரிகின்றதே

கருத்தோடு செயலாற்றும் வழி காணுவோம்

கார்மேகம் பார் எங்கும் படர்கின்றதே - 2

பொறுப்பின்றி இனி வாழ்ந்தால் அது பாவமே

3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்

வேரோடு பிடுங்குங்கள்ää வெளியேற்றுங்கள்

தூயாவி துணையோடு நிறைவேற்றுங்கள் - 2

பின் துணிவோடு விரைந்தெங்கும் கொடியேற்றுங்கள்

4. புதுப்பார்வை இதயத்தில் விழுந்தாகட்டும்

விண் ஆட்சி மண்மீது வந்தாளட்டும்

ஜனம் யாவும் சிலுவைமுன் பணிந்தாகட்டும் -2

நம் சமுதாயம் புதிதாகும் நனவாகட்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு