கிறிஸ்தவ பாடல்

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால்

Ennaip Pelappatuththum Iyaesuvaal

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் - நான்

எல்லாமே செய்து முடிப்பேன்

தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட

விரைவினில் பல மக்கள் மீட்டிடவே

1. சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் - 2

பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்

தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்

2. யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2

பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே

இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்

3. சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2

எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன்

பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு