கிறிஸ்தவ பாடல்

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!

Enna Thiyaakam, En, Kalvaari Naayakaa!

இதுவல்லவா தியாகம்

என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!

என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!

1. விண் தூதர் போற்றிடும் உம் - பிதாவையும்

விட்டிறங்கி வந்தீரே!

மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!

மானிடர் மேல் அன்பினால்

2. ஜெனித்த நாள் முதலாய் - கல்வாரியில்

ஜீவனை ஈயும் வரை

பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!

பாவியை மீட்பதற்காய்

3. தலையைச் சாய்த்திடவோ - உமக்கு ஓர்

தலமோ எங்குமில்லை

உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!

முன் பாதை காட்டினீரே

4. தாய் தந்தை வீடும் நாடும் - இன்னும்

தனக்குள்ளதெல்லாம் வெறுத்து

அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!

அப்போஸ்தலர் என்றீரே

5. பாடுகளல்லோ உம்மை - மகிமையில்

பூரணமாய்ச் சேர்த்ததே

உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!

என் ஜீவனையும் வைத்தே

6. இன்பம் எனக்கினியேன் - என் அருமை

இயேசுதான் என் பங்கல்லோ!

நேசரின் பின்னே போகத்துணிந்தேன்

பாசம் என்னில் வைத்ததால்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு