கிறிஸ்தவ பாடல்

நமது இயேசு கர்த்தரென்று

Namathu Iyaesu Karththarenru

பாடகர் / பாடலாசிரியர்: Bro.Zac Robert

நமது இயேசு கர்த்தரென்று

நாவுகள் யாவும் அறிக்கையிடும் - 2

முழங்கால் யாவும் முடங்கிடும்

அவர் முன் முழங்கால் முடங்கிடும் - 2

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

1. சர்வத்தை ஆண்டிடும் தேவனவர்

அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் - 2

வல்லமை தேவனை நித்திய தேவனை

ஜாதிகள் யாவும் அறிந்திடுமே

2. ஊற்றுண்ட பரிமள தைலமவர்

உலகில் வாசனை வீசுபவர் - 2

ஆதியும் அவரே அந்தமும் அவரே

நித்திய நாமம் உடையவரே

3. வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே

வானோர் தலத்தோர் பணிந்திடுவார் - 2

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

பூமியில் கீழானோர் பணிந்திடுவார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு