கிறிஸ்தவ பாடல்

ஆவியை அருளுமே, சுவாமீ

Aviyai Arulumae Swamy

பாடகர் / பாடலாசிரியர்: அருளானந்தம்

ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்

காயுர் கொடுத்த வானத்தினரசே!

1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?

நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?

முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?

முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? – ஆவியை

2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,

பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,

தேவ சமாதானம், நற்குணம், தயவு,

திட விசுவாசம் சிறிதெனுமில்லை – ஆவியை

3. தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்@

திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,

பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,

பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் – ஆவியை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு