கிறிஸ்தவ பாடல்

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

Karththarukkul Kalikuurnthu Makizhkiraen

பாடகர் / பாடலாசிரியர்: Fr. Berchmans

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்

கவலைகளை மறந்து துதிக்கிறேன்

ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே

ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

ஆனந்த பலி ஆனந்த பலி

(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு - 2

1. பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு

பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு .. இன்று

2. பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு

பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு - எனவே

3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு

பேய்களை விரட்டும் ஆற்றல் வந்;தாச்சு

4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா... என்

நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா

5. கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு - என்

கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு