கிறிஸ்தவ பாடல்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

En Meetpar Uyiroetirukkaiyilae Enak

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்

கென்ன குறையுண்டு நீ சொல், மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,

என்னோடிருக்கவே எழுத்திருந்தோர்

விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்,

மித்திரனே சுகபத்திர மருளும்.

-என் மீட்பர்

2. பாபமோ, மரணமோ, நரகமோ, பேயோ,

பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,

சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்:

சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய்.

-என் மீட்பர்

3. ஆசிசெய்திடுவார், அருள்மிக அளிப்பார்,

அம்பரத் தனிலெனக்காய் ஜெபிப்பார்:

மோட்சமே மறைப்பார், முன்னமே நடப்பார்,

மோட்ச வழி சத்யம் வாசல் உயிரெனும்.

-என் மீட்பர்

4. கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்:

கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார்:

பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,

பரம பதவியினுற் என்றனை எடுப்பார்.

-என் மீட்பர்

5. போனது போகட்டும், புவி வசை பேசட்டும்,

பொல்லான் அம்புகளெய்திடட்டும்,

ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்,

அன்புமிகும் பேரின்ப மெனக்கருள்.

-என் மீட்பர்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு