கிறிஸ்தவ பாடல்

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

Naankal Aaraathikkum Enkal Thaevan

பாடகர் / பாடலாசிரியர்: Rev.Dr.Jawahar Samuel

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்

அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்

அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம் - நாங்கள்

1. எரிகிற அக்கினி சூளையிலும்

விடுதலை அக்கினியாய் வந்திடுவார்

சேதம் வராமல் காத்திடவே -2

தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

2. நிகரே இல்லா பட்டயம் அவர்

நீதியின் கரத்தினால் நடத்திடுவார்

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2

உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

3. மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்

மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே - 2

தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

4. சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்

எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்

இராஜாதி இராஜா வருகின்றாரே - 2

மேகங்களுடனே வருகின்றாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு