கிறிஸ்தவ பாடல்

பனி போல பெய்யும் பரிசுத்தரே

Pani Poela Peyyum Parisuththarae

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

பனி போல பெய்யும் பரிசுத்தரே

மழையாக பொழியும் ஆவியே....

ஆவியே ஆவியே

மழையாக பொழியும் ஆவியே... -பனி

1. மென்மையானவரே

மேகஸ்தம்பமே!

ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி

ஆனந்த தைலமே -பனி

2. யுத்தங்கள் செய்யவரே

யோர்தானை பிளந்தவரே

பெருமழையாய் பிரவேசித்த

உள்ளங்கை மேகமே -பனி

3. வறண்ட நிலங்களிலே

வாய்க்கால்கள் அமைப்பவரே

கனிதரும் மரமாக

காப்பாற்றி வளர்ப்பவரே -பனி

4. ஆவியானவரே

ஆற்றல் தருபவரே

தேற்றரவே துணையாளரே

விண்ணகத் தூபமே -பனி

5. அக்கினியானவரே

அன்பின் ஜூவாலையே

ஆசீர்வதியும் அரவணையும்

ஆன்மீகத் தீபமே -பனி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு