கிறிஸ்தவ பாடல்

தேவ அடிச்சுவட்டில் செல்லவே

Thaeva Atissuvattil Sellavae

தேவ அடிச்சுவட்டில் செல்லவே

நான் தீர்மானித்தேன் இன்றே

அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |

புது நோக்கம் என் வாழ்வினிலே | 2 - தேவ

இயேசுவின் அன்பினையே நான்

அனுதினம் அனுபவித்தேன்

ஊற்றிடுவேன் என்னை பலியாக |

அவர் அன்புக்கு பதிலாக | 2 - தேவ

உலகத்தை முற்றிலுமாய் தினம்

சிலுவையில் அறைந்திடுவேன்

சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |

அவர் காட்டும் பாதையிலே | 2 - தேவ

இந்தியர் இயேசுவுக்கே என்ற

நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்

என் தலைமுறையை இயேசுவுக்கே |

வரவழைப்பேன் சீக்கிரமே | 2 - தேவ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு