கிறிஸ்தவ பாடல்

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும்

Unthan Naamam Makimai Pera Vaentum

பாடகர் / பாடலாசிரியர்: Fr. Berchmans

உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே

உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே

ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

1. இந்தியா (அகிலம்) இரட்சகரை அறிய வேண்டுமே

இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே

சாபம் நீங்க சமாதானம் வரணுமே

3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்

கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்

4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே

ஜீவ நதி பெருகியோட வேண்டுமே

5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே

உபவாசகூட்டம் பெருக வேண்டுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு