கிறிஸ்தவ பாடல்

என் அருள் நாதா இயேசுவே

When I survey the Wonderous Cross/En Arul

என் அருள் நாதா இயேசுவே

சிலுவைக் காட்சி பார்க்கையில்

பூலோக மேன்மை நஷ்டமே

என்றுணர்ந்தேன் என்னுள்ளத்தில்.

என் மீட்பர் சிலுவையல்லால்

வேறெதை நான் பாராட்டுவேன்

சிற்றின்பம் யாவும் அதினால்

தகாதென்று தள்ளுவேன்

கை தலை காலிலும் இதோ

பேரன்பும் துன்பம் கலந்தே

பாய்ந்தொடும் காட்சிபோல் உண்டோ

முட்கிரீடமும் ஒப்பற்றதே

மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்

சம்பாதித்தீந்த இயேசுவே

உமக்கு என்றும் தாசரால்

மா ஸ்தோத்திரம் உண்டாகவே

சராசரங்கள் அனைத்தும்

இவ்வன்பிற்கு எம்மாத்திரம்

என் ஜ“வன், சுகம், செல்வமும்,

என் நேசருக்கும் பத்தியம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு