கிறிஸ்தவ பாடல்

அருள் ஏராளமாய் பெய்யும்

There shall be showers/Arul Aeraalamaay

அருள் ஏராளமாய் பெய்யும்

உறுதி வாக்கிதுவே

ஆறுதல் தேறுதல் செய்யும்

சபையை உயிர்ப்பிக்குமே

அருள் ஏராளம் அருள் அவசியமே

அற்பமாய் சொற்பமாய் அல்ல

திரளாய் பெய்யட்டுமே

அருள் ஏராளம் பெய்யும்

மேக மந்தாரமுண்டாம்

காடான நிலத்திலேயும்

செழிப்பும் பூரிப்புமாய் - அருள்

அருள் ஏராளமாய் பெய்யும்

இயேசு வந்தருளுமேன்

இங்குள்ள கூட்டத்திலேயும்

கிரியை செய்தருளுமேன் -அருள்

அருள் ஏராளமாய்ப் பெய்யும்

பொழியும் இக்கணமே

அருளின் மாரியைத் தாரும்

ஜ“வ தயாபரரே -அருள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு