கிறிஸ்தவ பாடல்

வாரும் ஐயா போதகரே

Vaarum Aiyaa Poethakarae

பாடகர் / பாடலாசிரியர்: வேத நாயக சாஸ்திரியார்

1. வாரும் ஐயா போதகரே

வந்ந்தெம்மிடம் தங்கியிரும்

சேரும் ஐயா பந்தியினில்

சிறியவராம் எங்களிடம் ( வாரும்..)

2. ஒளிமங்கி இருளாச்சே

உத்தமனே, வாரும் ஐயா

கழுத்திரவு காத்திருப்போம்

காதலனே கருணை செய்வாய் ( வாரும்..)

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்

நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க

தாமதமேன் தயை புரிய

தற்பரனே, நலம் தருவாய் ( வாரும்..)

4. உன்றன் மனை திருச்சபையை

உலக மெங்கும் வளர்த்திடுவாய்

பந்தமறப் பரிகரித்தே

பாக்யம் அளித் தாண்டருள்வாய் ( வாரும்..)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு