கிறிஸ்தவ பாடல்

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே

Sollarum Meygngnaanarae, Maenmaiprapuvae

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,

சுரூபத் தரூபக் கோனாரே, - உரை.

வல்லறஞ் சிறந்து மனுவானாரே, - உயர்

இல்லறந் துறந்து குடிலானாரே, - உரை ………. சொல்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி, - மிகு

கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,

வையகம் புரப்பதற்கு வந்தாரே, - அருள்

பெய்து நவமும் தவமுந் தந்தாரே, - உரை ………. சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி, - அதி

உச்சித சுதந்தர அருள்வாரி,

ஐயா வல்லாவே, மாதேவா, - ஓ!

துய்யா, நல்லாவே, ஏகோவா, - உரை ………. சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே, - உயர்

தேவ சபையில் எமைச் சேர்த்தாரே@

செல்லமாய் முகம் பார்த்தாரே, - பெரும்

செல்வம் போல் எமைச் சேர்த்தாரே, - உரை ………. சொல்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு