கிறிஸ்தவ பாடல்

என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்?

Enna Paakkiyam, Evarkkuntu

பல்லவி

என்ன பாக்கியம், எவர்க்குண்டு

இந்தச் சிலாக்கியம்?

அனுபல்லவி

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,

மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; - என்

சரணங்கள்

1. வானகந் தானோ, - அல்லதிது – வையகந் தானோ?

ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்

கானகந் தன்னில் என் கையில் அமர்ந்து;

- என்ன

2. சாமியைக் கண்டேன், - மகானந்தம் - சாலவுங்கொண்டேன்,

காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,

கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்;

- என்ன

3. அன்னமும் நீயே; - கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;

மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?

மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?

- என்ன

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு