கிறிஸ்தவ பாடல்

கண்டேன் என் கண்குளிர

Kandaen En Kankulira

கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் – கண்

1. பெத்தலேம் சத்திர முன்னணையில்

உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் – கண்

2. தேவாதி தேவனை, தேவசேனை

ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் – கண்

3. பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,

ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் – கண்

4. முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,

இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் – கண்

5. மண்ணோர் இருள் போக்கும் மாமணியை

விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் – கண்

6. அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை

கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் – கண்

7. அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்

முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் – கண்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு