கிறிஸ்தவ பாடல்

என் அடையாளம் உம் முகம் அல்லவோ

En Adayaalam Um Mugam Allavoe

என் அடையாளம் உம் முகம் அல்லவோ.

என் முகவரி உம் சமுகம் அல்லவோ..

உயர்த்திடுவேன் உம் நாமத்தை,

பிடித்திடுவேன் உம் கரத்தை (2) - என் அடையாளம்

அயராமல் தேடுவேன்

துயராமல் வாழுவேன் (2)

பிரியாமல் பிணைவேன்

பிரியமே பாதத்தில்(2)

உந்தன் நிழலை நித்தம் வாஞ்சிப்பேன். - என் அடையாளம்.

உந்தன் வார்த்தையே

என் பாதைக்கு வெளிச்சமே (2)

உம் வாசம் சுவாசிப்பேன்

சுகமாய் ஜீவிப்பேன் (2)

என் நேசரே உம்மை நேசிப்பேன் - என் அடையாளம்

உம்மை யோசிப்பேன் உம்வசம் யாசிப்பேன் (2)

நீங்காத உறவே.. நினைவெல்லாம் நிறைவே.. (2)

உயிரிலும் உணர்விலும் கலந்திட்ட கர்த்தரே - என் அடையாளம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு