கிறிஸ்தவ பாடல்

உம்மாலே தான், என் இயேசுவே

Ummalae ththan En Yesuvae

1. உம்மாலே தான், என் இயேசுவே,

ரட்சிக்கப்படுவேன்;

உம்மாலேதான் பேரின்பத்தை

அடைந்து பூரிப்பேன்.

2. இப்பந்தியில் நீர் ஈவது

பரம அமிர்தம்;

இனி நான் பெற்றுக்கொள்வது

அநந்த பாக்கியம்.

3. இவ்வேழை அடியேனுக்கு

சந்தோஷத்தைத் தந்தீர்;

இக்கட்டு வரும்பொழுது,

நீர் என்னைத் தேற்றுவீர்.

4. பூமியில் தங்கும் அளவும்

உம்மையே பற்றுவேன்;

எவ்வேளையும் எவ்விடமும்

நான் உம்மைப் போற்றுவேன்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு