கிறிஸ்தவ பாடல்

உன்னையன்றி வேறேகதி

Unnaiyanri Vaeraekathi

நீரே எங்கள் கதி

உன்னையன்றி வேறேகதி ஒருவரில்லையே ஸ்சுவாமி

அன்னை தந்தை உற்றார் சுற்றார் - ஆருமுதவுவரோ?

அதிசய மனுவேலா! ஆசை என் இயேசு ஸ்வாமி!

1. பண்ணின துரோகமெல்லாம் - எண்ணினா லெத்தனைகோடி

பாதகத்துக் குண்டோ எல்லை - பரதவித்தேனே தேடி

கண்ணினாலுன் திருவடிக் - காண நான் தகுமோதான்?

கடையனுக்கருள்புரி - மடியுமுன் இயேசு ஸ்வாமி!

2. அஞ்சியஞ்சித் தூர நின்றேன் - சஞ்சலங்களை நான் சொல்லி

அலைகடல் துரும்புபோல் - மலைவு கொண்டே னானையோ!

கெஞ்சிக் கெஞ்சிக் கூவு மிந்த - வஞ்சகன் முகம்பாராய்க்

கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபைவை இயேசு ஸ்வாமி!

3. எத்தனை கற்றாலும் தேவ - பக்தியேது மற்ற பாவி

எவ்வளவு புத்திகேட்டும் - அவ்வளவுக்கதி தோஷி

பித்தனைப் போல பிதற்றிக் - கத்தியே புலம்பு மேழைப்

பேதையைக் கடைத்தேற்றிப் - பிழைக்கவை இயேசு ஸ்வாமி!

4. கள்ளனாம் கபடனென்னைத் - தள்ளிவிட்டா லாவதென்ன

கல்லைப்போல் கடினங்கொண்ட - கர்ம சண்டாளன் பாழும்

உள்ளமுங்கரைந்தே உன்றன் - உயர் சிலுவையினன்பால்

உலையிலிட்ட மெழுகாய் - உருகவை இயேசு ஸ்வாமி!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு