கிறிஸ்தவ பாடல்

உத்தமமாய் முன்செல்ல

uththamamaay Munsella

மரணபரியந்தம் உண்மையாயிரு

1. உத்தமமாய் முன்செல்ல

உதவி செய்யும் யெகோவா

ஊக்கமதைக் கைவிடாமல்

காத்துக்கொள்ள உதவும் - 2

2. பலவிதமாம் சோதனைகள்

உலகத்தில் எமை வருத்தும்

சாத்தானின் அக்கினி ஆஸ்திரங்கள்

எண்ணா நேரத்தில் தாக்கும் - 2

3. தீர்மானங்கள் தோற்காவண்ணம்

காத்துக்கொள்ள உதவும்

நேர்மையாக வாக்கைக் காக்க

வழிவகுத்தருளவேண்டும் - 2

4. இவ்வுலகமான மாயாபுரி

அழியப்போவது நிச்சயம்

இரட்சகனே நீர் இராஜாவாக

வருவது அதி நிச்சயம் - 2

5. தூதரோடு பாடலோடு

பரலோகில் நான் உலாவ

கிருபை செய்யும் இயேசு தேவா

உண்மை வழிகாட்டியே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு