கிறிஸ்தவ பாடல்

உன்றன் சுயமதியே நெறி என்று

Undran Suyamathiyae Neri

உன்றன் சுயமதியே நெறி என்று

உகந்து சாயாதே; - அதில் நீ

மகிழ்ந்து மாயாதே.

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்

வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்

கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்.

2. சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,

வந்து விளையுமே கேடு - அதின்

தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு.

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்

திட்ட மதாய் நடவாதே - தீயர்

கெட்ட வழியில் நில்லாதே அது தீதே.

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு

மிக்க இருக்க நண்ணாதே அவர்

ஐக்யம் நலம் என்றென்னாதே அதொண்ணாதே.

5. நான் என்னும் எண்ண மதால் பிறரை அவ

மானிப்பது வெகு பாவம் - அதின்

மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு