கிறிஸ்தவ பாடல்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

Iyaesuvaip Pinparrum Manitharkal Yaar

என்னைப் பின்பற்றி வா

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

இந்தப் பூவுலகில்? - எந்தன்

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்

இந்தப் பூவுலகில்?

1. சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா

நயமாக அழைக்கிறார் வா -நீ வா

உலக மாமிச ஆசை

வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா

2. எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா

எல்லாவற்றையும் விற்று வா - நீ வா

பிசாசின் வலையில் சிக்கி

பாழாய் போய் விடாதே வாää வா - நீ வா

இயேசுவைப் பின்பற்றி வா

3. ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா

உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா

இச்சையின் வலையில் நீ

சிக்கி விடாதே வாää வா - நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா

4. பின்பற்ற வருகிறேன் நான் - நானே

உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே

இயேசுவே இரங்கிடும்

ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்

இயேசுவைப் பின்பற்றுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு