கிறிஸ்தவ பாடல்

ஆவியை மழைபோலே யூற்றும்

Aaviyai Mazhaipoelae Yuurrum

ஆவிமழை பொழிந்திடச் செய்யும்

ஆவியை மழைபோலே யூற்றும்- பல

ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே

பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

1. அன்பினாலே ஜீவனை விட்டீர் - ஆவி

அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்

இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ

ஏராளமான ஜனங்களைச் சேரும்

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்

தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து

பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு

பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்

3. காத்திருந்த பலபேரும் - மனங்

கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்

தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து

சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்

4. ஸ்தோத்திர கீதங்கள் பாடி - எங்கும்

சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்

பாத்திரராக அநேகரெழும்பப்

பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு