கிறிஸ்தவ பாடல்

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

Athikaalaiyil Um Thirumukam Thaeti

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்

அப்பனே உமக்கு தந்தேன் - அன்பு நேசரே

ஆராதனை ஆராதனை - 2

அன்பர் இயேசு இராஜனுக்கு

ஆவியான தேவனுக்கு

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்

உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் - 2

என் வாயின் வார்த்தை எல்லாம்

பிறர் காயம் ஆற்ற வேண்டும் - 2 -ஆராதனை

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்

என் இதயத் துடிப்பாக மாற்றும் - 2

என் ஜீவ நாட்கள் எல்லாம்

ஜெபவீரன் என்று எழுதும் - 2 -ஆராதனை

3. சுவிசேஷ பாரம் ஒன்றே

என் சுமையாக மாற வேண்டும் - 2

என் தேச எல்லையெங்கும்

உம் நாமம் சொல்லவேண்டும் - 2 -ஆராதனை

4. உமக்குகந்த தூய பலியாய்

இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் - 2

ஆட்கொண்டு என்னை நடத்தும்

ஆவியாலே என்னை நிரப்பும் - 2 -ஆராதனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு