கிறிஸ்தவ பாடல்

விளைந்த நிலம் ஏராளமே

Vilaintha Nilam Aeraalamae

இயேசுவை அறிவிக்கப் புறப்படு

விளைந்த நிலம் ஏராளமே

அறுவடைக்கோ ஆளோ இல்லை

விளைவின் பலன் அழிகின்றதே - 2

அறுத்திடச் செல்வார் யாருமில்லை - 2

1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை

அறுத்திட இயேசு தானே சென்றார்

என் அருமைச் சீடர்களே - 2

கண்களை உயர்த்தி பாரும் என்றார் - 2

2. கோடி கோடியான ஜனங்கள் இன்று

அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி

என் ஜனங்கள் அழிந்திடாமல் - 2

தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? - 2

3. உலகினில் வாழ்வது ஒரு தரமே

அதுவும் சீக்கிரம் கடந்திடுமே

கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் - 2

இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு