கிறிஸ்தவ பாடல்

மாறிடா எம் மா நேசரே

Maaritaa Em Maa Naesarae

அன்பு ஒருக்காலும் ஒழியாது

1. மாறிடா எம் மா நேசரே - ஆ

மாறாதவர் அன்பெந் நாளுமே

கல்வாரி சிலுவை மீதிலே

காணுதே இம்மா அன்பிதே - ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே

அதின் ஆழம் அறியலாகுமோ

இதற்கிணை யேதும் வேறில்லையே

இணை எதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே - அன்பால்

பாரில் உன்னைத் தேடி வந்தாரே

நீசன் என்றுன்னைத் தள்ளாமலே

நேசனாக மாற்றிடவே. - ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்

உள்ளம் போல் நேசித்ததினால்

அல்லல் யாவும் அகற்றிடவே

ஆதி தேவன் பலியானாரே. - ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய

தேவனின் விண் சாயல் அணிய

ஆவியாலே அன்பைச் சொரிந்தார்

ஆவலாய் அவரைச் சந்திக்க - ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே - நீயும்

நிலையாகும் தைரியம் பெறவே

ப10ரணமாய் அன்பு பெருக

புண்ணியரின் அன்பு வல்லதே - ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடும் - யாவும்

பாரினிலே சகித்திடும்

அது விசுவாசம் நாடிடுமே

அன்பு ஒருக்காலும் ஒழியாதே - ஆ! இயேசு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு