கிறிஸ்தவ பாடல்

பிரபு இயேசுவை துதித்திடுவோம்

Pirapu Iyaesuvai Thuthiththituvoem

துதிப்போம் அல்லேலூயா

பிரபு இயேசுவை துதித்திடுவோம் - அவர்

பொற்பாதம் பணிந்திடுவோம்

அல்லேலூயா பாடிடுவோம் - அவர்

புகழ் எங்கும் கூறிடுவோம்.

1. துதி மலர்கள் விரும்பிடுவார்

துதிபாடி ஆராதிப்போம்

விண் தூதர்கள் ஆராதிக்கும்

விண் வேந்தன் இயேசுவையே - 2

விண் அதிர ஸ்தோத்தரிப்போம் - 2

2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்

எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்

எல்லையில்லா அன்பானவர்

என்றும் மாறா சினேகத்தாலே - 2

நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் - 2

3. திரியேக ஆண்டவரை

நம் நெஞ்சில் வாழ்பவரை

முழு மனதுடன் தொழுதிடுவோம்

கொல்கதாவின் மேட்டினிலே - 2

நம்மை மீட்டார் அல்லேலூயா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு