கர்த்தாவின் ஓய்வு நாள் இதாம்,
விசாரம் வேலையை எல்லாம்
ஒழித்து தேவ தயவை
சந்தோஷமாகவே நினை.
கர்த்தர் படைத்தவை எல்லாம்
அவர்க்கு மா புகழ்ச்சியாம்;
இருள் இருந்த பொழுதே
வெளிச்சம் தோன்றச் செய்தாரே.
விசேஷமாகப் பாவத்தை
நிவிர்த்தி செய்த அருளை
மகிழ்ந்து பாடிப் போற்றுவோம்,
என்றைக்கும் உம்மை வாழ்த்துவோம்.
கெம்பீரமாய் எழுந்த பின்
இந்நாளில் அவர் சீஷரின்
துக்கிப்பை நீக்கி திக்கற்றார்
இருதயத்தைத் தேற்றினார்.