கிறிஸ்தவ பாடல்

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?

isravele unnai eppadi kaividuven

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?

எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?

என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது

என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது – 2

எப்படி கைவிடுவேன்? – நான்

எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2

என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?

என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

2. நானே தான் உன்னைக் குணமாக்கினேன்

ஏனோ நீ அறியாமல் போனாயோ? – 2

எப்படி கைவிடுவேன்? – நான்

எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2

என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?

என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்

கரம்பிடித்து நடக்கப் பழக்குகிறேன் – 2

எப்படி கைவிடுவேன்? – நான்

எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2

என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?

என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்

பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் – 2

எப்படி கைவிடுவேன்? – நான்

எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை – 2

இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?

எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?

என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு