என் மேலே வந்த தெய்வம்
என்னை வாழ வைத்தீரே
நித்தியமான வாழ்வுக்காக
எனை அழைத்தீரே-(2)
அன்பே என் உயிரே
உயிரின் உயிரே
அன்பே என் இயேசுவே
உயிரில் கலந்தவரே-(2)
1. இருளடைந்த என் வாழ்வில்
ஒளியாக வந்தவரே
இருளடைந்த உலகத்துக்கு
ஒளியாக மாற்றினீரே-(2)
2. பாவியான என்னை நீர்
பரிசுத்தமாக்கினீரே
பரலோக ராஜ்ஜியத்தில்
என்னை சேர்த்து வைத்தீரே