கிறிஸ்தவ பாடல்

எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthuppaattu

எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் இயேசு தருகிறார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்

உயிருள்ள நாள் வரையில் (2) — எந்தன்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்

தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் — ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்

பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் — ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்

நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் — ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்

நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் — ஆனந்தம்

5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்

அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் — ஆனந்தம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு