கிறிஸ்தவ பாடல்

என்னை சுமப்பதனால் இறைவா

ennai Sumappathanaal Iraivaa

என்னை சுமப்பதனால் இறைவா

உம் சிறகுகள் முறிவதில்லை

அள்ளி அணைப்பதனால் இறைவா

உம் அன்பு குறைவதில்லை

ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்

வானம் கிழிவதில்லை

ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்

நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்

குழந்தை சுமையில்லை

கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு

இமைகள் சுமையில்லை

மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்

பனித்துளி சுமையில்லை

வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்

மழைத்துளி சுமையில்லை

மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும் பூமிக்கு

முட்கள் சுமையில்லை

இகழும் மனிதரில் இரங்கும் மனதிற்கு

சிலுவைகள் சுமையில்லை

உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்

நான் ஒரு சுமையில்லை

உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்

இதயம் சுமையில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு