கிறிஸ்தவ பாடல்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

enakku Oththaasai Varum Parvathangalukku

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

நேராக என் கண்களை ஏறெடுப்பேன்

வானம் பூமி உண்டாக்கின – கர்த்தரிடம்

எனக்கு ஒத்தாசை வந்திடுமே

1. உன் காலைத் தள்ளாடவொட்டார்

உன்னைக் காக்கிறவர் உறங்கார்

இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர்

உறங்குவதில்லை, தூங்குவதுமில்லை — வானம்

2. கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி

உன் ஆத்துமாவையுங் காப்பார்

உன் போக்கையும் வரத்தையுமே

இது முதற்கொண்டு என்றென்றைக்குங் காப்பார் — வானம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு