கிறிஸ்தவ பாடல்

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

En Naesar Vellaip Polach Senndu

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து

நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே

பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்

இன்பமானவர் ஆத்ம நேசர்

மதுரமானவர் எந்தன் நேசர்

பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர்

1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி

மரம் போல் ஆனவர் இவர்

கன்மலைக் குன்றின் வெடிப்பிலே

ஓடிவரும் மானுக்கு சமானமாவார் — என்

2. வெண்மையும் சிவப்புமானவர்

புறாவின் கண்கள் கொண்டவர் அவர்

கேதுரு மரம்போல் ஆனவர்

பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் — என்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு