கிறிஸ்தவ பாடல்

என் பாதங்கள் கல் மீது இடறாமல்

En paathangal kal meethu idaraamal

என் பாதங்கள் கல் மீது இடறாமல்

கண் வைத்து காப்பவரே

எப்பக்கம் சத்துரு முயன்றாலும்

நடு நின்று காப்பவரே

எல்-மோஷா என்னை காப்பவரே

எல்-மோஷா உருவாக்கினீரே

உருக்குலைந்த யாக்கோபு என்னை

இஸ்ரவேலாய் மாற்றினீரே

அக்கினி சூளையில் எரிந்தபோது

என் பக்கம் நின்றவரே

கருகின வாசனை இல்லாமலே

கருத்தோடு காத்தவரே

ஆயிரம் தடை வழி மறித்தாளும்

கொஞ்சமும் பயமில்லையே

அனுப்பிய தேவன் நீர் பெரியவரே

தடையிலும் பெரியவரே

இயேசு என்னை அழைத்தாரே

இயேசு என்னை விடுவித்தாரே

உருக்குலைந்த பாவி-என்னை

நீதிமானாய் மாற்றினாரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு