ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
ஏல் ஹக்காதோஷ் நீர் என் தேவனே
என்னை பரிசுத்தமாக்கும் திவ்ய தேவனே
நீர் சொன்னதை செய்திடும் தேவன்
என்னை நெருக்கத்தில் தாங்கிடுவீர் -2
ஏல் ஹக்காதோஷ் -3
நீர் பரிசுத்த தேவன் நீரே
ஏல் ஹக்காதோஷ் -3
என்னை பரிசுத்தமாக்குவீரே
யோசேப்பை முன்குறித்த தேவன் நீரே
எளியோனை வலியவனாய் மாற்றினீரே -2
கால் வைக்கும் தேசத்தை சுதந்தரித்திட
கர்த்தர் நீர் அபிஷேகம் செய்தவரே -2
கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும் போது
அநேகத்தின் அதிபதியாய் உயர்த்திடுவீர் -2
என் சந்ததியின் மேல் உம் ஆசீர்வாதம்
நிறைவாக ஊற்றி பெருகச்செய்வீர் -2