பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத
வாயில ஊத்தாத வம்பையும் வாங்காத
போதையை போடாத சாபத்தை தேடாத
பார்ட்டிக்கு போகாத நீ போக்கிரி ஆகாத
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சுக்கோ உடனே திருந்திக்கோ
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சிக்கோ நண்பா திருந்திக்கோ
(ஏ திருந்திக்கோப்பா) – 2
காசு வந்ததும் மோசம் போகாத
கடையைப் பார்த்ததும் நடைய மாத்தாத -2
புத்தியோடிரு தம்பி புரிதலோடிரு -2
உண்மையாயிரு அண்ணே ஒழுக்காயிரு -2
அண்ணே கொஞ்சம் ஒழுக்கமாயிரு (சரிதான)
நண்பனைப் பார்த்ததும் மனச மாத்தாத
போதையை நினைச்சதும் மூட்அவுட்டு ஆகாத -2
விலகியே இரு நண்பா தூரமாயிரு
வீட்டிலே இரு சொந்த மனைவியோடிரு -2
வெறுப்பு வந்ததும் சரக்க நோக்காத
மோகம் வந்ததும் பாருக்கு போகாத -2
கடவுளோடிரு அவரின் பிள்ளையாயிரு
உரிமையாயிரு இனிமேல் சாட்சியாயிரு -2
குடித்து வெறித்து நோயாளி ஆகாத
பாதி வயசுல பாதாளம் போகாத -2
மனுஷனாயிரு மனசுல சுத்தமாயிரு
வெளிச்சமாயிரு நீயும் மகிழ்ச்சியோடிரு -2