பயப்படாதே என் மகனே
பயப்படாதே என் மகளே
பிரியமானவனே நீ பயப்படாதே
பிரியமானவளே சோர்ந்து போகாதே
உன் பிரச்சனை உன்னை சூழ்ந்தாலும்
உன் போராட்டங்கள் பெருகினாலும்
உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்
ஒரு வழியாய் இன்று வந்தாலும்
ஏழுவழியாக ஓடிப்போவார்கள்
உன் கண்களாலே நீ அதை காண்பாய்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போக செய்வேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமா இருக்கும் – 2
உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதிதிப்பேன்
உன்னை பெருகவே பெருகச்செய்வேன்
என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன்
என் கரங்களால் உன்னை மூடுவேன்
நீ என்னோடு கூடு நடப்பதை என் பிள்ளையாய்
இருதயத்தை குளிரச்செய்வாய்
உனக்காக ஒரு பந்தியை
ஆயத்தமாக வைத்திருக்கிறேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமா இருக்கும் – 2
நீ தண்ணீரை கடக்கும்போது பயப்படாதே
சோதனை பெருகும் போதும் சோர்ந்து போகாதே
கன்மலை வெடிப்பில் பாதுகாப்பேன்
என் கரத்தின் நிழலினால் மூடுகின்றேன்
புதிய காரியம் இன்று செய்வேன்
இன்றைக்கே நீ அதை காண்பாய்
உன் மன விருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன்
ரெட்டிப்பான நன்மை காண்பாய்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமா இருக்கும் – 2