கிறிஸ்தவ பாடல்

பவனி செல்கின்றார் இராஜா

Bavani Selginrar Raja Naam

பவனி செல்கின்றார் இராஜா – நாம்

பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி

ஆனந்தம் பரமானந்தம்

எருசலேமின் பதியே – சுரர்

கரிசனையுள்ள நிதியே

அருகில் நின்ற அனைவர் போற்றும்

அரசே எங்கள் சிரசே — பவனி

பன்னிரண்டு சீடர் சென்று – நின்று

பாங்காய் ஆடைகள் விரிக்க

நன்னயம் சேர் மனுவின் சேனை

நாதம் கீதம் ஓத — பவனி

குருத்தோலைகள் பிடிக்க – பாலர்

கும்பல் கும்பலாகவே நடக்க

பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று

போற்ற மனம் தேற்ற

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு