தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேவ கோபம் உனக்கு வேண்டாம் என்று
கண்ணீரோடு கதறி நான் ஜெபிக்கிறேன்
தேவ கோபம் உனக்கு வேண்டாம் என்று
கண்ணீரோடு கதறி நான் அழுகிறேன்
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
நீதியும் இல்லையே நியாயமும் இல்லையே
இரக்கமும் இல்லையே உன் தேசத்தில் -2
கொடுமைகள் பெருகுதே கொலைகளும் பெருகுதே
அழிவுகள் பெருகுதே உன் தேசத்தில் -2
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
சுவிசேஷம் இல்லையே இரட்சிப்பும் இல்லையே
சத்தியம் இல்லையே உன் தேசத்தில் -2
நோய்களும் பெருகுதே பேய்களும் பெருகுதே
வறுமையும் பெருகுதே உன் தேசத்தில் -2
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
ஒழுக்கமும் இல்லையே உண்மையும் இல்லையே
மன்னிப்பும் இல்லையே உன் தேசத்தில் -2
பகைகளும் பெருகுதே பிரிவினை பெருகுதே
துரோகங்கள் பெருகுதே உன் தேசத்தில்- 2
தேசமே என் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்
தேசமே பாழாகும் தேசமே
உனக்காக திறப்பில் நான் நிற்கிறேன்