கிறிஸ்தவ பாடல்

அற்புதம் அற்புதமே என் இயேசு

Atputham Atputhamae

அற்புதம் அற்புதமே என் இயேசு அற்புதமே

என் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமே

என் வாழ்வில் செய்த அற்புதம் அற்புதமே

கானா ஊரின் கலியாணத்தில் வருகை தந்தவர்

காய்ந்துபோன பாத்திரங்கள் யாவும் நிரப்புங்கள் என்றார்

நிரப்ப நிரப்ப அற்புதங்கள் செய்துகாட்டினார்

நல்ல ரசம் என்று கூறி பரவசமடைந்தார்

குஷ்டரோகியை கைகளினால் தொட்ட இயேசுவாம்

குருடர் செவிடர் சப்பாணிகள் சொஸ்தமாயினார்

கண்ணீர் சிந்தும் மக்களுக்கு ஆறுதல் சொன்னார்

கலக்கமின்றி வாழ நம்மை ஜீவன் தந்தவர்

வார்த்தை சொல்ல வருத்தம் யாவும் நீங்கிப்போகுமே

வஸ்திரத்தை தொட்டவுடன் வியாதி நீங்குமே

இயேசு நாமம் சொன்னவுடன் பயமும் நீங்குமே

இன்றுமவர் அற்புதங்கள் செய்ய வல்லவர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு