கிறிஸ்தவ பாடல்

அரசனைக் காணமலிருப்போமோ?

Arasanai Kanamal Irupomo

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது

ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்

பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்

ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,

ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்

தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை

தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்

திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!

பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்

பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை

அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்

அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!

இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்

எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை

அரமனையில் அவரைக் காணோமே! – அதை

அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!

மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்

வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை

பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்

பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!

வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ

வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு