கிறிஸ்தவ பாடல்

நன்றியோடு உம்மை பாடி,

Nantiyodu ummai paati,

நன்றியோடு உம்மை பாடி,

நாள்தோறும் போற்றுவேன்;

தாழ்வில் இருந்த என்னை,

தூக்கி கரம் பிடித்து,

வாழ வழி செய்தீரே – (2)

1. பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,

பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)

போதித்து வழி நடத்தி, பிள்ளைகள பெருகச் செய்தீர்,

உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

2. தாயைப் போல் என்னை காத்தீர்,

தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)

எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,

உம் கிருபைக் கீடாகுமா -(2)….(நன்றியோடு)

3. பயத்தை என்னினின்று நீக்கி,

தைரிய சாலியாக மாற்றினீர் -(2)

பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,

எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு