கிறிஸ்தவ பாடல்

அன்புள்ள ஸ்வாமி

anbulla swami

1 அன்புள்ள ஸ்வாமி, நீர் நிர்ப்பந்தமாக

மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக?

நீர் என்ன செய்தீர், தேவரீரின் மீது

ஏன் இந்தத் தீது?

2 வாரால் அடிப்பட்டு, எண்ணமற்றீர்,

குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்;

பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள்,

வதைத்திட்டார்கள்.

3 இவ்வாதை யாவும் உமக்கெதினாலே

உண்டாயிற்று? ஐயோ, என் பாவத்தாலே;

அதும்மை, ஸ்வாமி, இத்தனை அடித்து

வதை செய்தது.

4 மா ஆச்சரியம், கர்த்தர் சாக வாரார்,

நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார்,

அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர்

கடனைத் தீர்ப்பர்.

5 ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்;

நான் உம்மைப்பற்றி, யாவையும் வெறுக்கும்

கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும்

பண் உமக்கேற்கும்.

6 இதற்கும் என் சாமர்த்தியம் போதாது,

பழைய துர்க்குணம் என்னால் நீங்காது;

நீர் உமதாவியை அளித்துவாரும்

பலத்தைத் தாரும்.

7 அப்போ நான் உமதன் நிறைந்து,

பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து,

என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும்

பலம் இருக்கும்.

8 பரகதியிலே நான் வைக்கப்பட்டு

கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று

எப்போதும் உம்மை, இயேசுவே, துதிப்பேன்,

இஸ்தோத்திரிப்பேன்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு