கிறிஸ்தவ பாடல்

அன்பைச் சொல்ல வந்தோம்

Anbei Solla Vanthom

அன்பைச் சொல்ல வந்தோம்

நாங்கள் இயேசுவின் மாசற்ற

அன்பினை சொல்ல வந்தோம்

பெரும்பெரும் பாவங்கள் நீ செய்திருக்கலாம்

பெற்றோரே உன்னை வெறுக்கிறேன்

உன்னையும் அன்புடன் அழைத்து மன்னிக்கும்

இயேசப்பாவின் அன்பினை சொல்ல வந்தோம்

தெய்வத்தின் அன்பினை சொல்ல வந்தோம்

பாக்கெட்டில் பத்துப் பணம் இருந்தால்

உன்னைச் சுற்றிலும் நண்பருண்டு

வயிற்றுக்கு வழியின்றி தவிக்கையிலே

எந்த நண்பன் கூட உண்டு

இயேசு சுவாமி துணையாய் உண்டு

மினுமினு என்று உடை அணிந்தால்

உன்னை காண கண்களுன்டு

கந்தை துணியோடு நடமாடினால்

எந்த கண்கள் காண உண்டு

இயேசு சாமி காண உண்டு

உத்தியோகம் சம்பாத்தியம் இருக்கையிலே

உன்னை சுற்றிலும் உறவு உண்டு

வேலை இல்லாமல் அலைகையிலே

எந்த உறவினன் கூட உண்டு

இயேசு சுவாமி உறவாய் உண்டு

திறமைகள் பல உன்னில் இருக்கையிலே

உன்னை சுற்றிலும் ரசிகருண்டு

திறமையில் குறைந்து திணறுகையில்

எந்த ரசிகன் கூட உண்டு

இயேசு சுவாமி ரசிக்க உண்டு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு