கிறிஸ்தவ பாடல்

அன்பான மாந்தரே கூடுங்களே

anbana mantharae koodungalae

அன்பான மாந்தரே கூடுங்களே

ஆரோக்கிய மாதாவைப் பாடுங்களே

கீதங்கள் அவள் பெயரை சொல்லட்டுமே

நாதங்கள் எங்கெங்கும் ஒலிக்கட்டுமே (2)

மண்ணாளும் மாதாவை வாழ்த்தட்டுமே

மரியாளின் புகழ்கூறிப் போற்றட்டுமே (2)

முப்பொழுதும் அவள் கன்னியம்மா

எப்பொழுதும் நம் அன்னையம்மா

வானோர்கள் அறிந்திட்ட அற்புதமே

வேதங்கள் அறியாத தத்துவமே (2)

தேவாதி தேவனின் தாயகமே

திருமறை போற்றிடும் நாயகமே (2) –முப்பொழுதும்

தேவைகள் தீர்க்கின்ற தேவதாயே

தீமைகள் களைகின்ற அன்புத்தாயே (2)

உலகினர் கண்ணுக்கு ஒளியும் நீயே

ஊமைகள் பேசிட மொழியும் நீயே (2) –முப்பொழுதும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு