கிறிஸ்தவ பாடல்

ஆமென் அல்லேலூயா

amen alleluia

ஆமென் அல்லேலூயா!

ஆமென் அல்லேலூயா!

மகத்துவத் தம்பராபரா,

ஆமென் அல்லேலூயா!

ஜெயம்! ஜெயம்!

அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்

துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – (ஆமென் அல்லேலூயா)

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே

தாளத்தைச் சங்கரித்து – முறித்து

பத்ராசனக் கிறிஸ்து – மரித்து

பாடுபட்டுத்தரித்து முடித்தார் – (ஆமென் அல்லேலூயா)

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து

தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து

ஜீவனே விடிந்து – தேவாலயத்

திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – (ஆமென் அல்லேலூயா)

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி

மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி

பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி

பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – (ஆமென் அல்லேலூயா)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு